ஆட்சிப்பொறுப்பேற்ற ஓர் ஆண்டுக்குள்ளாகவே 50 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம் - அமைச்சர் எ.வ.வேலு


ஆட்சிப்பொறுப்பேற்ற ஓர் ஆண்டுக்குள்ளாகவே 50 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம் - அமைச்சர் எ.வ.வேலு
x
தினத்தந்தி 1 May 2022 3:08 PM IST (Updated: 1 May 2022 3:08 PM IST)
t-max-icont-min-icon

ஆட்சிப்பொறுப்பேற்ற ஓர் ஆண்டுக்குள்ளாகவே 50 சதவீத வாக்குறுதிகளை முதல் அமைச்சர் நிறைவேற்றியுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்,

தமிழ்நாட்டில் ஐந்து ஆண்டுகளில் கூடுமான வரை தரைப்பாலங்கள் இல்லாத வகையில் மேம்பாலங்கள் அமைத்திட வேண்டும் என்ற இலக்கில் தமிழக அரசு பயணித்து வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் காரப்பேட்டையில் நடைபெற்று வரும் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அமைச்சர், ஆட்சிப் பொறுப்பேற்ற ஓர் ஆண்டுக்குள்ளாகவே 50 சதவீத வாக்குறுதிகளை, முதல் அமைச்சர் நிறைவேற்றி விட்டதாக தெரிவித்தார். நிதி நிலைக்கு ஏற்ப வருங்காலங்களில் மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

Next Story