மே.3 ஆம் தேதி மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு

மே.3 ஆம் தேதி மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 1 May 2022 10:02 PM IST (Updated: 1 May 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகை வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாப்படுவதை முன்னிட்டு மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ரம்ஜான் பண்டிகை  வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாப்படுவதை முன்னிட்டு மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அந்தவகையில் சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-அரக்கோணம், சூலூர்பேட்டை, மற்றும் கடற்கரை-செங்கல்பட்டு, வேளச்சேரி வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். 

இதேபோல் பயணிகள் முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story