கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி
x
தினத்தந்தி 2 May 2022 3:50 AM IST (Updated: 2 May 2022 3:50 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன்(வயது 42). மீனவரான இவருக்கு அபிபுனிசா(39) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்தநிலையில் பூங்காவனபுரத்தைச் சேர்ந்த யுவராஜ் (36) என்பவருடன் அபிபுனிசாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அபிபுனிசா, கணவரை விட்டு பிரிந்து கள்ளக்காதலன் யுவராஜூடன் சென்று வாழ்ந்து வந்தார்.

கொலை செய்ய முயற்சி

இதற்கிடையே மணிமாறன், தனது மனைவி அபிபுனிசாவை சந்தித்து மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார்.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தனது கணவர் அடிக்கடி தொந்தரவு செய்வதாக கள்ளக்காதலன் யுவராஜிடம் கூறிய அபிபுனிசா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துகட்டவும் திட்டமிட்டதாக தெரிகிறது.

அதன்படி போதையில் இருந்த யுவராஜ், தனது நண்பர் ராம்குமாருடன் சேர்ந்து கடற்கரையில் படகை பழுது நீக்கி கொண்டிருந்த மணிமாறணை சுத்தியலால் தலையில் அடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே யுவராஜ் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனின் மனைவி அபிபுனிசா, அவருடைய கள்ளக்காதலன் யுவராஜ் மற்றும் ஒண்டிகுப்பத்தை சேர்ந்த ராம்குமார் (32) ஆகியோரை கைது செய்தனர்.

Next Story