ஆரம்பப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
ஆரம்பப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.
சென்னை,
இந்தியாவில் தற்போது கோடைக்காலம் நிலவி வரும் சூழலில், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது தொடர்பாக அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கோடை கால வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு இல்லாத மாணவர்களுக்கும் முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காததால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதனால், சில விருப்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெறுகிறது. இது வேதனை அளிக்கிறது. அதனை சரிசெய்ய தமிழ்நாடு அரசு திவீர முயற்சி எடுத்துவருகிறது. மேலும், மாணவர்களின் நலனில் ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் கவனம் செலுத்த வேண்டும், என்று கூறினார்.
Related Tags :
Next Story