சென்னையில் செஸ் ஒலிம்பியாட்: 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு


சென்னையில் செஸ் ஒலிம்பியாட்: 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 2 May 2022 5:27 PM IST (Updated: 2 May 2022 5:27 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகின் பல்வேறு 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் கொண்ட இந்திய குழுவை அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.

பிரக்ஞானந்தா, குகேஷ், ஹரிகிருஷ்ணா, அதிபன் ஆகிய இளம் கிராண்ட் மாஸ்டர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணிக்கு கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story