வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை - மருத்துவ கல்லூரி விளக்கம்
வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர், ஒரே நாளில் பல நாட்களுக்கான வருகை பதிவுக்கு கையெழுத்தடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வருகைப் பதிவேட்டில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற தகவல் பரவியது
இந்த நிலையில் வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது. முதுநிலை கலந்தாய்வின் இறுதிச்சுற்று நிறைவடைந்த நிலையில் மாணவர்களின் வருகைப்பதிவுக்காக வருகைப்பதிவேடு திறக்கப்பட்டது.
மாணவி மற்ற மருத்துவர்களுக்கோ அல்லது தான் வராத நாட்களுக்கோ கையொப்பம் இடவில்லை என்று தெரிவித்துள்ளது. கையொப்பமிட்ட சம்பவம் குறித்து பயமாக இருப்பதாகவும், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவி புகார் அளித்துள்ளார் என்று மருத்துவகல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story