நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது


நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
x
தினத்தந்தி 2 May 2022 8:43 PM IST (Updated: 2 May 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

சென்னை:

இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ஐ.ஜி.சி.எஸ். அமியா என்ற கப்பல் நாகப்பட்டினம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தது. அப்போது இந்திய கடல் எல்லையில் அத்துமீறி இலங்கை படகு ஒன்று மீன்பிடிப்பதை கடலோர பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.

இதையடுத்து அந்த மீன்பிடி படகை சுற்றி வளைத்த கடலோர பாதுகாப்பு படையினர், அந்த படகில் இருந்த 6 இலங்கை மீனவர்களை கைது செய்தனர். மேலும் அந்த படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களையும், மீன்பிடி படகையும் நாகப்பட்டினம் கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story