அக்னி நட்சத்திரம்: வேலூர் மக்களுக்கு ஆட்சியர் புதிய அறிவிப்பு!
காலை 11 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள்,நோயாளிகள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்த்தியுள்ளார்.
வேலூர்,
தமிழகத்தில் மதிய வேளைகளில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. தமிழகக்த்தில் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக வேலூரில் தமிழகத்திலேயே அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதனால், வேலூரில் காலை 11 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள்,நோயாளிகள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்த்தியுள்ளார்.
வரும் மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story