கூடுவாஞ்சேரியில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.10 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


கூடுவாஞ்சேரியில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.10 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 3 May 2022 9:42 AM IST (Updated: 3 May 2022 9:42 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரியில் நகராட்சிக்கு சொந்தமான, ரூ.10 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு சொந்தமான இடங்களை, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாக, மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில், கூடுவாஞ்சேரி மின்வாரியம் அருகே ஜி.எஸ்.டி. சாலை ஓரம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை, பிரபல தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுசுவர் கட்டி இருந்தனர். அதே இடத்தில் தனிநபர் ஒருவரும் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து இருந்தார்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாருக்கு புகார் வந்ததைத் தொடர்ந்து, நேற்று சம்பவ இடத்திற்கு நகராட்சி ஆணையர் இளம்பரிதி, நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் நகராட்சி ஊழியர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டி இருந்த சுற்றுச்சுவர் மற்றும் முள்வேலிகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஆக்கிரமிப்பு பிடியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள் மற்றும் நிலங்கள் அனைத்தும், மிக விரைவில் மீட்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Next Story