தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு, வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்க கூடும் - வானிலை ஆய்வு மையம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 May 2022 2:25 PM IST (Updated: 3 May 2022 3:05 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.


சென்னை,

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.தமிழகத்தில் மதிய வேளைகளில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு,ஓரிரு இடங்களில் அதிகபட்ச   வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச  வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

Next Story