தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் ஏன்? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் ஏன்? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
x
தினத்தந்தி 3 May 2022 2:48 PM IST (Updated: 3 May 2022 2:48 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் இன்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் இன்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 3 யூனிட்டுகளில் மொத்தம் 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி  விளக்கம் தெரிவித்துள்ளார் .

Related Tags :
Next Story