கள்ளக்குறிச்சியில் தீவிபத்து; 6 வீடுகள் அடுத்தடுத்து எரிந்து சேதம்


கள்ளக்குறிச்சியில் தீவிபத்து; 6 வீடுகள் அடுத்தடுத்து எரிந்து சேதம்
x
தினத்தந்தி 3 May 2022 5:09 PM IST (Updated: 3 May 2022 5:09 PM IST)
t-max-icont-min-icon

காற்று வேகமாக வீசியதால், அடுத்தடுத்த வீடுகளுக்கு மளமளவென தீ பரவியது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நைனாகுப்பம் கிராமத்தில் அடுத்தடுத்து 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் மணிகண்டன் என்பவரது குடிசை வீடு முதலில் தீப்பற்றி எரிந்துள்ளது. தொடர்ந்து காற்று வீசியதால், அடுத்தடுத்த வீடுகளுக்கும் மளமளவென தீ பரவியுள்ளது. 

இதையடுத்து கிராம மக்கள் தீயை அணைக்க முயன்றனர். இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் நைனாகுப்பம் கிராமத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

அப்போது ஒரு வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பெருத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், ஒரு தீயணைப்பு வீரர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த வீபத்தில் வீடுகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story