தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் கன மழை..!
இன்று அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. மேலும் வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது.
இதனிடையே தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது மாலை நேரத்தில் மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிதீவிரமாக இருந்தது. அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.
அதுவே மதியத்திற்க்கு பின் கோவை, நாமக்கல், சேலம், பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்தது. மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. மேலும் கொடைக்கானல் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
இன்று அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ள நிலையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story