சிவகங்கை: உலகம்பட்டியில் மீன்பிடி திருவிழா....!


சிவகங்கை: உலகம்பட்டியில் மீன்பிடி திருவிழா....!
x
தினத்தந்தி 4 May 2022 5:34 PM IST (Updated: 4 May 2022 5:34 PM IST)
t-max-icont-min-icon

உலகம்பட்டி மேல்புளியக்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

எஸ்.புதூர்,

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் உள்ள மேல்புளியக்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகாலை முதலே ஊத்தா, தூரி, கச்சா, வலை ஆகியவற்றுடன் கண்மாயை சுற்றிலும் காத்து இருந்தனர். 

இந்த நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள் கொடியசைத்ததை தொடர்ந்து இவர்கள் கண்மாயில் இறங்கி ஆர்வமுடன் மீன் பிடிக்க தொடங்கினர்.

இதில் கெண்டை, கெளுத்தி, அயிரை, கட்லா, ஜிலேபி போன்ற நாட்டு வகை மீன்களை இவர்களுக்கு கிடைத்தது. இந்த மீன்களை தங்கள் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

Next Story