திருவண்ணாமலை ஸ்ரீகேணியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வந்தவாசியை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விளாநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகேணியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் யாக சாலை அமைத்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மூலவர் ஸ்ரீகேணியம்மனுக்கு மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேகத்தில் வந்தவாசியை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story