ராமேஸ்வரம்: ரெயில் தண்டவாளத்தில் வைத்து மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரித்ததால் அதிர்ச்சி...!
ரெயில் தண்டவாளத்தில் வைத்து மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பாக ரெயிவே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம்,
ஹைதராபாத் செகந்திராபாத் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி இன்று அதிகாலை ஒரு ரெயில் வந்து கொண்டிருந்தது.
இந்த ரெயில் ராமேஸ்வரம் ரெயில்வே நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாக வந்த போது ரெயில்வே தண்டவாள பாதையின் குறுக்கே மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை என்ஜின் டிரைவர் பார்த்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து ரெயிலை சிறிது தூரத்திற்கு முன்பாகவே சாமர்த்தியமாக நிறுத்திவிட்டார். ரெயில் என்ஜினியரின் எந்த செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து தண்டவாளத்தின் குறுக்கே எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்து வாகனத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story