திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவ விழா...!


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவ விழா...!
x
தினத்தந்தி 6 May 2022 9:56 AM IST (Updated: 6 May 2022 9:56 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பூமாலை அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெற்றது. 

தொடர்ந்து மகிழ மரத்தை சுற்றி பத்து முறை அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story