தென்காசி: சுவரை துளையிட்டு செல்போன் கடையில் திருட்டு - போலீசார் விசாரணை...!


தென்காசி: சுவரை துளையிட்டு செல்போன் கடையில் திருட்டு - போலீசார் விசாரணை...!
x
தினத்தந்தி 6 May 2022 10:41 AM IST (Updated: 6 May 2022 10:41 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் செல்போன் கடையில் கொள்ளையடித்து உள்ளனர்.

புளியங்குடி,

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் புளியங்குடி பஸ் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் நேற்று வணிகர் தினத்தை முன்னிட்டு கடைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை கடையை ஊழியர்கள் திறந்து உள்ளானர். அப்போது கடையின் உள்ளே பொருட்கள் சிதறிக்கிடந்து உள்ளது.  மேலும் கடையின் பக்கவாட்டுச் சுவர் துளை இடப்பட்டிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து கடையில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் செல்வது தெரியவந்தது. 

இது குறித்து புளியங்குடி போலீசாருக்கு கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் கடையின் சுவரை துளையிட்டு சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story