9½ லட்சம் மாணவர்கள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 9½ லட்சம் மாணவ-மாணவிகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. கொரோனா தொற்றால் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடக்கிறது.
சென்னை,
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்படாமல், ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு நடத்தப்பட்டது.
அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், கொரோனா தொற்று பரவத்தொடங்கிய கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே தேர்வு நடத்தப்படவில்லை. அந்த ஆண்டில் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து கணக்கிட்டு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டும் கொரோனா காரணமாக தேர்வு நடத்த முடியாமல் போனது.
அந்த ஆண்டில் மாணவர்களுக்கு மதிப்பெண் எதுவும் அளிக்காமல் தேர்ச்சியை மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
இப்படியாக கடந்த 2 ஆண்டுகள் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது 2 ஆண்டு இடைவெளிக்கு பின் நடப்பு கல்வியாண்டில் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்து 78 ஆயிரத்து 89 மாணவர்கள், 4 லட்சத்து 60 ஆயிரத்து 247 மாணவிகள், ஒரு திருநங்கை என மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 337 பேர் எழுதுகின்றனர். தமிழகம்மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 936 தேர்வு மையங்களில் இந்த தேர்வை மாணவர்கள் நேற்று எழுதினார்கள்.
வழக்கம்போல, தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு மாணவர்கள் முறையான பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மாணவர்களின் உடல் வெப்பநிலையையும் பரிசோதிக்கப்பட்டன.
மாணவர்கள் முறைகேடாக தேர்வு எழுதுவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகளும் அவ்வப்போது தேர்வு அறைக்கு சென்று கண்காணித்தனர். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிறப்பு ஏற்பாட்டாளர்கள் உதவியுடன் தேர்வு எழுதியதையும் பார்க்க முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7 ஆயிரத்து 470 மாணவ-மாணவிகள் இந்த 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதுதவிர சிறைவாசிகளாக இருக்கும் 242 பேரும் தேர்வை நேற்று எதிர்கொண்டனர்.
வினாத்தாள் எளிதாக இருந்தது
கொரோனா தொற்றுக்கு மத்தியில் 2 ஆண்டுகளில் கடந்த 4 மாதங்களில் மட்டும் நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டு நேரடியாக பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்கள் எவ்வாறு தேர்வை எதிர்கொள்ள போகிறார்கள்? என்ற பயம் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் இருந்தது.
இந்த நிலையில் நேற்று நடந்த தமிழ் தேர்வை 10-ம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலானோர் நன்றாக எழுதி இருப்பதாகவே தெரிவித்தனர். அதற்கேற்றாற்போல், தமிழ் தேர்வு வினாத்தாளும் எளிதில் பதில் அளிக்கக்கூடிய வகையில் கேட்கப்பட்டு இருந்ததாகவும், எதிர்பார்க்கப்பட்ட வினாக்களே அதிகம் கேட்கப்பட்டதாகவும், குறிப்பாக குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே வினாக்கள் அமைந்திருந்ததாகவும் மாணவர்கள் கூறினர்.
42 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முதல் நாளில் தமிழ் தேர்வு நடந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ-மாணவிகள் எழுத இருந்தனர்.
இவர்களில் 42 ஆயிரத்து 24 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என்று பள்ளிக்கல்வித் துறையின் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
வருகிற 14-ந்தேதி விருப்பமொழித் தேர்வும், 18-ந்தேதி ஆங்கிலத் தேர்வும் நடைபெற இருக்கிறது.

Related Tags :
Next Story