தமிழகத்தில் ஓடும் தரம் இல்லாத அரசு பஸ்களை திரும்பபெற வேண்டும்
தமிழகத்தில் ஓடும் தரம் இல்லாத அரசு பஸ்களை திரும்பபெற வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டை, உடைசலான அரசு பஸ்கள் இயக்கப்படுவது தமிழக மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் காலாவதியான அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பே, தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பஸ்களை மாற்றி, மக்கள் பாதுகாப்பாக பயணிக்க புதிய பஸ்களை இயக்க வேண்டும்.அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம், 5 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு அரசு பஸ்களில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு பஸ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். அதில் தரம் இல்லாத பஸ்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story