ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு: அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை,
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்களான அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story