மருந்து கடையில் பெண்ணுக்கு கருகலைப்பு - கடை உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு..!
கடலூர் அருகே மருந்துக்கடையில் வைத்து பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன்-அனிதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக கருத்தறித்துள்ளார்.
இந்நிலையில் மூன்றாவதாக பிறக்க போகும் குழந்தை ஆணை? பெண்ணா? என கண்டறிய கடந்த சில நாட்களுக்கு முன்பு இராமநத்தம் வந்துள்ளனர். அப்போது சட்டவிரோதமாக கருவில் உள்ளது பெண் குழந்தை என கண்டறிந்துள்ளனர்.
பின்னர் கடந்த வியாழக்கிழமை அன்று இராமநத்தத்திற்க்கு கருக்கலைப்பு செய்ய வந்துள்ளனர். அங்கு திட்டக்குடியை சேர்ந்த முருகன் என்பவர் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். அவர் தனது மெடிக்கல் கடையில் வைத்தே அனிதாவிற்க்கு கருக்கலைப்பு செய்துள்ளார். அப்போது காலையில் இருந்து மாலை வரை அனிதா மயக்கத்தில் இருந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சத்தம் போட்டுள்ளார். பின்னர் முருகன் தனது காரில் பெரம்பூரில் உள்ள 2 தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளிக்க மறுக்கவே பெரம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அப்போது வேல்முருகன் தனது மனைவியை அழைத்து கொண்டு மருத்துவமனையில் சேர்க்க சென்ற போது முருகன் அங்கிருந்து தப்பிவிட்டார். பின்னர் கடந்த 2 நாட்களாக அவசர சிகிச்சை பிரிவில் அனிதா சிக்கிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும் மெடிக்கல் கடை நடத்தி வந்த முருகன் டிகிரி மட்டுமே முடித்த நிலையில் மெடிக்கல் கடையில் வைத்தே கருக்கலைப்பு செய்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் போலீசார் முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story