தண்ணீருக்கு பதிலாக டர்பன் ஆயில் குடித்த முதியவர் உயிரிழப்பு..!


தண்ணீருக்கு பதிலாக டர்பன் ஆயில் குடித்த முதியவர் உயிரிழப்பு..!
x
தினத்தந்தி 7 May 2022 5:39 PM IST (Updated: 7 May 2022 5:39 PM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூர் அருகே முதியவர் ஒருவர் தண்ணிருக்கு பதிலாக டர்பன் ஆயிலை குடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை:

சென்னை, அம்பத்தூர் அடுத்த அத்திபட்டு, வன்னியர் தெருவில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன் (74). அம்பத்தூர் எஸ்டேட் 5-வது தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 7 வருடமாக காவலராக வேலை செய்து வந்தார். 

இந்நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த சுந்தர் ராஜன் தண்ணீருக்கு பதிலாக டர்பன் ஆயிலை எடுத்து தவறுதலாக குடித்ததில் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தர்ராஜன் உயிரிழந்தார். இதுகுறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story