தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை...!


தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை...!
x
தினத்தந்தி 8 May 2022 12:13 PM IST (Updated: 8 May 2022 12:13 PM IST)
t-max-icont-min-icon

தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

தாளவாடி

ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக  பகல் நேரத்தில் வெயில் வாட்டி வருவதும், மாலை நேரத்தில்  மழை பெய்வதுமாக இருந்துவந்தது.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் 11 மணிவரை தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளான தலமலை, கோடிபுரம்  நெய்தாளபுரம், ஒசூர், சிக்கள்ளி, பனக்கள்ளி, கெட்டவாடி ஆசனூர், குளியாடா, திகனாரை போன்ற பகுதியில் பலத்த மழை பெய்தது. 

இந்த மழையால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பின. இதேபோன்று தாளவாடி, திகனாரை, சூசைபுரம் பகுதிகளில் பெய்த மழையால் அங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

மேலும் இந்த தொடர் மழையால் அப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட  தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் வீணாகி செல்கின்றது. இதனால் அப்பகுதியில் கூடுதல் தடுப்பணைகள் கட்டி மழைநீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story