விம்கோ பணிமனை-பழைய வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு
உயர் அழுத்த மின்கம்பி பழுதால் விம்கோ பணிமனை-பழைய வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் விம்கோ பணிமனை முதல் வண்ணாரப்பேட்டை வரை செல்லும் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில், புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் சாலை சந்திப்புக்கு மேலே உள்ள உயர் அழுத்த மின்சார கம்பியில் இருந்த பீங்கான் பொருள் உயர் அழுத்த மின்சாரம் காரணமாக நேற்று மதியம் 1.30 மணி அளவில் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வீராரகவன் ரோடு சந்திப்பில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதற்கிடையே மெட்ரோ ரெயில் நிர்வாகம் உயர் அழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டன. இதனால் விம்கோ பணிமனை ரெயில் நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சிறிது நேரம் ஒரு வழிப்பாதையில் இயக்கப்பட்டது.
இதனால் திருமண நிகழ்ச்சி மற்றும் கோயம்பேடு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகள் மெட்ரோ ரெயில் சேவை இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டு மதியம் 3 மணி அளவில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது.

Related Tags :
Next Story