கஞ்சா கடத்தல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
கஞ்சா கடத்தல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கோவை:
கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 29.1.2020 அன்று கோவை ரெயில்நிலைய ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது 2 பைகளுடன் வந்த முதியவரிடம் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அவர் வைத்திருந்த பைகளில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இவற்றை கோவையை சேர்ந்தவர்களுக்கு சப்ளை செய்ய தேனியில் இருந்து கடத்தி வந்ததாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தேவாரம் பகுதியை சேர்ந்த இளையராஜாவை (வயது 60), போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை போதை பொருள் ஒழிப்பு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம்சாட்டப்பட்ட இளையராஜாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story