அசானி புயல் எச்சரிக்கை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவை ரத்து


அசானி புயல் எச்சரிக்கை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவை ரத்து
x
தினத்தந்தி 10 May 2022 7:06 PM GMT (Updated: 2022-05-11T00:36:10+05:30)

அசானி புயல் எச்சரிக்கை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவை ரத்து.

ஆலந்தூர்,

வங்க கடலில் அசானி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புயல் ஒடிசா, ஆந்திரா அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் இருந்து நேற்று காலை 7 மணிக்கும், காலை 10:40 மணிக்கும் விசாகப்பட்டினம் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதைப்போல் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு நேற்று காலை 10:40 மணிக்கும், பகல் 1.45 மணிக்கும் வரவேண்டிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னையில் இருந்து ஐதராபாத், ஜெய்பூா், மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் 3 விமானங்களும் ஐதராபாத், ஜெய்பூா், மும்பை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டிணம், ஐதராபாத், மும்பை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த விமானங்கள் ரத்து பற்றிய தகவல்களை நேற்று முன்தினம் மாலையே பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story