சிவகங்கை : மருத்துவமனையில் விசாரணை கைதி தப்பி ஓட்டம்


சரவணலிங்கம்
x
சரவணலிங்கம்
தினத்தந்தி 11 May 2022 10:27 AM IST (Updated: 11 May 2022 10:27 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணை கைதி தப்பி ஓட்டிய நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை:

சிவகங்கையை அடுத்துள்ள சாத்தரசன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் முனுசாமி, சரவணலிங்கம். இவர்கள் இருவரும் நேற்று  சிங்காவோடை பகுதியில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டதில் சரவணலிங்கம் முனுசாமியை கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில் இருவருக்கும் காயம் ஏற்படவே  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  நிலையில் படுகாயமடைந்த முனுசாமி மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

இந்த  தாக்குதல் தொடர்பாக  சரவணலிங்கம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சரவணலிஙகம் சிவகங்கை அரசு மருத்துவமனையிலேயே இரு காவலர்கள் பாதுகாப்பில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

சிகிச்சை முடிந்ததும் கைது செய்ய முடிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் பாதுகாப்பில் இருந்த சரவணலிங்கம் காவலர்களின் கண்காணிப்பில் இருந்து நேற்று தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் தப்பியோடிய சரவணலிங்கத்தை காவல்துறையினர் தேடி வருவதுடன் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு செய்துவருகின்றனர். 

தப்பியோடிய சரவணலிங்கத்தை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். காவலர்கள் பாதுகாப்பில் இருந்தவர் தப்பி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story