சேலம் : பெண்ணிடம் பணம் பறித்த கொள்ளையர்கள் 4 பேர் கைது..!


சேலம் : பெண்ணிடம் பணம் பறித்த கொள்ளையர்கள் 4 பேர் கைது..!
x
தினத்தந்தி 11 May 2022 11:38 AM IST (Updated: 11 May 2022 11:38 AM IST)
t-max-icont-min-icon

சுய உதவிக்குழு பெண்களிடம் பணத்தை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்ப ஒப்படைத்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகர பகுதிக்குட்பட்ட சாத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மங்கையர்கரசி மகளிர்  உதவி குழு ஒன்றை  நடத்தி வருகிறார்.  

இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி ஆத்தூர் காமராஜர் சாலையில் உள்ள வங்கியில் இருந்து  மகளிர் குழுவின் பணத்தை (ரூ.1 லட்சத்து 20 ஆயித்தை ) எடுத்துக்கொண்டு மங்கையர்கரசி, செல்வி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். 

அப்போது மகளிர் காவல் நிலையம் அருகே மர்மநபர்கள் மங்கையர்க்கரசி முதுகில் ரசாயன பவுடரை தூவி சென்றுள்ளனர். அதனை துடைப்பதற்காக அருகில் உள்ள  கடையில் தண்ணீர் வாங்கி சுத்தம் செய்ய முயன்றபோது பணம் வைத்திருந்த பையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இது குறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் மங்கையர்க்கரசி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் குற்றவாளிகள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படத்தையும் போலீசார் வெளியிட்டிருந்தனர். வீடியோவில் ஒருவர் பையை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி அந்த காட்சிகள் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில்  வேரு வழக்கில் (ரூ.6 லட்சம்) கொள்ளை அடிக்கப்பட்டதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் தான் ஆத்தூரில் உள்ள மகளிர் உதவி குழு பெண்ணிடமிருந்தும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் (வயது 36), சங்கர் (30) , நந்துவினோத் (18) ,அஜய் பாபு (32)  என தெரிய வந்தது. 

இதன் பின்னர், கொள்லையடிக்கப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை  போலீசார்  பறிமுதல் செய்து மகளிர் குழுவிடம்  ஒப்படைத்தனர்.

Next Story