மாநில செய்திகள்

கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு....! + "||" + Increase in water supply to all KRPs ....!

கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு....!

கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு....!
கிருஷ்ணகிரியில் பெய்த தொடர் மழையால் கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 11 நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருவதாலும், கே.ஆர்.பி., அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையாலும், கே.ஆர்.பி. அணைக்கு கடந்த 8-ந் தேதி 484 கன அடியாக நீர்வரத்து இருந்தது. 

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், கே.ஆர்.பி. அணைக்கு நேற்று, 531 கன அடியாக மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று 46.45 அடியாக உயர்ந்து உள்ளது.