திருப்பத்தூர் - ஆம்பூரில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஆம்பூரில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருவிழாவை ஒத்திவைத்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருப்பத்துா்,
திருப்பத்துா் மாவட்டம் ஆம்பூரில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரியாணி திருவிழா நடைபெற இருந்தது. நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் விழாவில் மக்கள் அனைவரும் வந்து சாப்பிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அழைப்பு விடுத்தாா்.
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கன்னிகாபுரம் என்ற இடத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் இந்த மாபெரும் பிரியாணி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் 30 முதல் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டும். இவற்றில் மட்டன் சிக்கன், மீன் முட்டை பிரியாணி பாஸ்மதி, சீரக சம்பா, ஹைதராபாத் பிரியாணி என 22 சுவையான பிரியாணி சமைக்க உள்ளனர்.
இந்த திருவிழாவில் மாட்டிறைச்சி பிாியாணிக்கு மட்டும் அனுமதி இல்லை என மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்புகளிடம் இருந்து எதிா்ப்பு எழுந்தது. இந்த நிலையில், கனமழை எச்சாிக்கை காரணமாக பிாியாணி திருவிழா தற்காலிக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாகா அறிவித்துள்ளாா்.
Related Tags :
Next Story