திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம்...!


திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம்...!
x
தினத்தந்தி 13 May 2022 6:08 AM GMT (Updated: 13 May 2022 6:08 AM GMT)

தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது வருகின்றனது.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாய ஐயாறப்பர் கோவில் சப்த ஸ்தான உற்சவம் கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13 நாட்கள் நடக்கிறது.

இன்று 9-ஆம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா நடைபெற்று வருகின்றது. ஐயாறப்பர் மற்றும், அறம் வளர்த்த நாயகி அம்மன் தனித்தனி பெரிய தேர்களிலும், பஞ்ச மூர்த்திகள் தனித்தனி சிறிய தேர்களிலும் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளிலும் வீதி உலா வந்து மாலை 6 மணியளவில் கீழவீதி தேர்நிலையை அடைந்ததும் ஆராதனைகள் நடக்கிறது.

ஐயாறப்பர் தேர்வடம் பிடிக்க கல்யாணபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து கலந்து கொண்டு தேர்வடம் பிடித்து அருளாசி பெறுவது குறிப்பிடத் தக்கது.


Next Story