நிதி மேலாண்மையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது - அமைச்சர் கே.என்.நேரு


கோப்புப் படம்
x
கோப்புப் படம்

நிதி மேலாண்மையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்திற்கு நிதி ஆதாரம் திரட்டவில்லை என்று எதிர்க்கட்சி குறைகூறிக்கொண்டே வருவதாகவும் நிதி ஆதாரம் திரட்ட வரி போட்டால் வரி போடுவதாக குற்றஞ்சாட்டுவதாகவும் அமைச்சர் கே.என். நேரு விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் எதிர்க்கட்சி மாறி மாறி பேசி வருவதாக கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

நிதி ஆதாரம் திரட்ட வீட்டுவரி நகராட்சியில் போட்டால் போடக்கூடாது என்று கூறுகிறார்கள். ஆட்சிக்கு வந்து எதுவுமே செய்யவில்லை, 1 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர் என்று கூறுகிறார்கள். இவ்வாறு எதிர்க்கட்சியினர் இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி பேசுகிறார்கள்.

அரசு பொறுப்பேற்ற போது கொரோனாவையும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளையும் சமாளிப்பதே பெரும் சவாலாக இருந்தது. அதையும் தாண்டி நிறைய நல்ல பணிகளை முதல் அமைச்சர் செய்து வருகிறார். மேலும் நிதியை சேமித்து கடந்த ஆண்டில் பற்றாக்குறையை குறைத்து நல்ல திட்டங்களை செய்து கொண்டு இருக்கிறார்.

எதிர்க்கட்சியினர் குறை கூறவேண்டும் என்பதற்காகவே கூறுகிறார்களே தவிர தமிழகம் நிதி மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story