ஆரோவில்லில் இரு தரப்பினர் மோதல்


ஆரோவில்லில் இரு தரப்பினர் மோதல்
x
தினத்தந்தி 13 May 2022 7:05 PM GMT (Updated: 13 May 2022 7:05 PM GMT)

வானூர் அருகே உள்ள ஆரோவில் வளர்ச்சி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரோவில்லில் இரு தரப்பினர் மோதி கெண்டனா்.

வானூர் அருகே உள்ள ஆரோவில் மையத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைவராக உள்ளார். கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள ஆரோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக அப்பகுதியில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டது. இதற்கு ஆரோவில் வாசிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்தநிலையில் ஆரோவில்லில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள செயல்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை ஆரோவில் வாசிகள் முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் தற்போது ஒரே அமைப்பாக இருந்த செயல்பாட்டு குழுவை 2 ஆக பிரித்து ஆரோவில் நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி 2 குழுக்களுக்கு இடையே அலுவலகத்தை யார் நடத்துவது என்ற போட்டி நிலவுகிறது. இந்தநிலையில் நேற்று காலை அந்த அலுவலகத்திற்கு இரு தரப்பினரும் மாறி மாறி பூட்டு போட்டனர். இதன்காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதன்காரணமாக ஆரோவில்லில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story