சிக்னல் கோளாறு - மின்சார ரெயில் சேவை தாமதம்...!


சிக்னல் கோளாறு  - மின்சார ரெயில் சேவை தாமதம்...!
x
தினத்தந்தி 16 May 2022 3:36 AM GMT (Updated: 16 May 2022 3:36 AM GMT)

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரெயில்கள் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டது.

சென்னை, 

சென்னையில் பொதுமக்களின் சேவைக்காக அதிக அளவில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இத்தகைய ரெயில் பயணத்தை அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்துவதால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதில் புறநகர் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்கு வகுக்கிறது.

இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் பாதையில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னை கடற்கரை மார்கத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டது.

இந்த தாமதத்தால் பொதுமக்களும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.


Next Story