ஒரே மேடையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி


ஒரே மேடையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி
x
தினத்தந்தி 16 May 2022 5:02 AM GMT (Updated: 16 May 2022 5:02 AM GMT)

பல்கலைக்கழக துணை வேந்தரான கவர்னர் ஆர்என் ரவி தலைமையில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

சென்னை,

சென்னை பல்கலைக்கழக 164-ஆவது பட்டமளிப்பு விழாவில் இன்று காலை 10 மணிக்கு நூற்றாண்டு விழா தொடங்கியது.  பல்கலைக்கழக துணை வேந்தரான கவர்னர் ஆர்என் ரவி தலைமையில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில் அரசியல், கொள்கை ரீதியாக முரண்பட்ட கருத்துக்களை பேசுவார்களா என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, இந்தியை திணிக்க வேண்டாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும், இந்தியை திணிக்கவிலை என கவர்னரும் ஒரே மேடையில் பேசியிருந்தனர். இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சரும், கவர்னரும் சந்திக்கவுள்ளனர். இந்த விழாவில் பிஎச்டி மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் உள்பட 712 பேருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story