கோடை காலத்தில் அதிகரிக்கும் பாலாற்றின் நீர்வரத்து - விவசாயிகள் மகிழ்ச்சி...!
தொடர் மழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வேலூர்,
தமிழக ஆந்திரா எல்லைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக வாணியம்பாடி அடுத்த புல்லூரில் பாலாற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆந்திரா தடுப்பணை நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
தொடர் மழை காரணமாக பால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடையாஞ்சி பாலாற்றில் இன்று மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல ஒடுகத்தூர் மேல் அரசம்பட்டு பகுதியில் பெய்த கன மழை காரணமாக அங்குள்ள உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆற்று வெள்ளம் அகரம்சேரி அருகே பாலாற்றில் கலந்து ஓடுகிறது. இதனால் மீண்டும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை பகுதியில் பெய்த மழையின் காரணமாக நிரம்பி வழிகிறது. நேற்று குடியாத்தம் மற்றும் ஆந்திர வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக மோர்தானா அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது. அங்கிருந்து பெரிய ஏரி பகுதிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கோடை காலத்தில் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story