போராட தயங்காதவர் அற்புதம்மாள், தாய்மையின் இலக்கணம் -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய, எந்த எல்லைக்கும் சென்று போராட தயங்காதவர் அற்புதம்மாள், தாய்மையின் இலக்கணம் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார் .
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமா்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ;
கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் இலக்கணமாக அமைந்த தீர்ப்பு.நீதி, சட்டம், அரசியல், நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு.இந்த தீர்ப்பின் மூலம் மாநிலத்தின் உரிமை மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது .மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
இந்தியா முழுமைக்கான மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி .மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய, எந்த எல்லைக்கும் சென்று போராட தயங்காதவர் அற்புதம்மாள், தாய்மையின் இலக்கணம்
31 ஆண்டுகளுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்துக்கள் .இவ்வாறு அவர்கூறினார்
Related Tags :
Next Story