பேரறிவாளன் விடுதலை: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
பேரறிவாளன் விடுதலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை,
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. இந்த விடுதலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
* பேரறிவாளன் விடுதலை மிக்க மகிழ்ச்சிகரமானது. முதல்-அமைச்சர் மற்றும் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது - திமுக எம்.பி. டி.ஆர். பாலு
* 31 ஆண்டு கால சட்ட போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை காங்கிரஸ் ஏற்கிறது. ராகுல்காந்தியும், சோனியாகாந்தியும் இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் - காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்
* பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டே விடுதலை செய்ததை ஏற்கிறோம். நமது ஒற்றுமையையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்காது என நம்புகிறோம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
* பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டி உள்ளது - மதிமுக தலைவர் வைகோ
* பேரறிவாளன் விடுதலையில் பெருமகிழ்ச்சி; மற்ற 6 பேரையும் விடுவிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்
* தாயின் இடையறாத சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. காலம் தாழ்ந்த தீர்ப்பு என்றாலும் இறுதியில் அறம் வென்றுள்ளது. இளமை காலத்தை பறிகொடுத்துள்ள பேரறிவாளனுக்கு உரிய இழப்பீடு, மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் - விடுதலை கட்சி தலைவர் தொல் திருமாவளவன்
* பேரறிவாளனை விடுவித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். தனது பாதி காலத்தை சிறையிலேயே அவர் அனுபவித்துட்ட நிலையில் அவரது விடுதலை அற்புதம்மாளின் சட்டப்போராட்த்துக்கு கிடைத்த வெற்றி.
* இன்று தனது மகனை மீட்டெடுத்துள்ளார். மேலும் 6 பேரையும் விரைவில் விடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
* ''ஆயுள் தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்'' - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்
* பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
* “பேரறிவாளன் விடுதலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு, கவர்னரின் எதேச்சதிகார போக்கிற்கு குட்டு" அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டும் தான் கவர்னரின் பணி என்பதை தீர்ப்பு சுட்டிக்காட்டி உள்ளது. 20 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பு சுட்டிக்காட்டி உள்ளது. - ஜவாஹிருல்லா
* “நீதிக்கு இது ஒரு போராட்டம்.. இதை நிச்சயம் உலகம் பாராட்டும்” - நடிகர் சத்யராஜ்
* பேரறிவாளன் விடுதலை என்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்றும், இதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் . மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 26 குடும்பத்தினருக்கும் மத்திய அரசும், மாநில அரசும் நிவாரணம் வழங்க வேண்டும்.
இது மனிதாபிமான செயல். இந்தத் தீர்ப்பினை அடிப்படையாக கொண்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் - உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்
Related Tags :
Next Story