குடும்ப தகராறு - விஷம் குடித்து சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை....!


குடும்ப தகராறு - விஷம் குடித்து சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை....!
x
தினத்தந்தி 18 May 2022 2:20 PM IST (Updated: 18 May 2022 2:36 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே குடும்ப தகராறு காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 திண்டுக்கல்,

விருதுநகர் மாவட்டம் குள்ளம்பட்டியை சேர்ந்தவர் ஜீவராஜ். இவர் பழனி 14-வது பட்டாளியின் போலீசில்  சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 

இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து  தற்கொலை செய்ய முயன்று உள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிந்துவந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சப்-இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் பரிதாபமக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த  நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story