2024 நாடாளுமன்றத் தேர்தல் : வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி ஜூலை 4ல் தொடங்கும் - சத்யபிரதா சாகு
2024 நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு போதுமான அளவுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் உள்ளன.
சென்னை,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ,
தேர்தலுக்கு முன்பாக, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களும் சரியாக இருக்க வேண்டும். அதில் ஏதாவது கோளாறுகள் இருப்பின், அதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கான பணிகள் வரும் ஜூலை 4ம் தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, 2024 நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு போதுமான அளவுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் உள்ளன.
ஏப்.1, ஜூலை 1, அக்.1, இந்த தேதிகளுக்குள் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், முன்கூட்டியேகூட வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
Related Tags :
Next Story