'புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
எதிர்கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
பெங்களூருவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். எதிர்கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும்" என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story