2,059 டன் யூரியா சின்னசேலம் வந்தது


2,059 டன் யூரியா சின்னசேலம் வந்தது
x
தினத்தந்தி 20 Dec 2022 6:45 PM GMT (Updated: 20 Dec 2022 6:45 PM GMT)

சென்னை, தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2,059 டன் யூரியா சின்னசேலம் வந்தது

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் விவசாயத்துக்கு தேவையான 1,454 மெட்ரிக் டன் யூரியா உர மூட்டைகள் சென்னையில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சின்னசேலம் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கியது. இதை வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, உதவி இயக்குனர்(தர கட்டுப்பாடு) அன்பழகன் ஆகியோர் ஆய்வு செய்து மாவட்டத்துக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்துக்கு 1,249 மெட்ரிக் டன் யூரியா, சின்னசேலம் அருகே உள்ள சேலம் மாவட்ட ஒன்றியங்களுக்கு 205 மெட்ரிக் டன் யூரியா உர மூட்டைகளை லாரிகளில் அனுப்பி வைத்தனர்.

இதேபோல் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் வந்திறங்கிய 605 மெட்ரிக் டன் யூரியா, 692 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உர மூட்டைகளை தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள் பயிர்களுக்கு யூரியாவை மட்டும் பயன்படுத்தாமல் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகள் கொண்ட காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தவும், மேலும் விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்து மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு உரங்களை மட்டும் வாங்கி பயனடையுமாறும் விவசாயிகளை கேட்டுக் கொண்டனர்.


Next Story