20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு, வாகனங்களை நிறுத்த வசதி


20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு, வாகனங்களை நிறுத்த வசதி
x

20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு, வாகனங்களை நிறுத்த வசதி செய்து தர வேண்டும் என கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் முன்னாள் அமைச்சர்கள் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

மதுரை

20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு, வாகனங்களை நிறுத்த வசதி செய்து தர வேண்டும் என கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் முன்னாள் அமைச்சர்கள் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

அ.தி.மு.க. மாநாடு

மதுரை விமான நிலையம் அருகே உள்ள வலையங்குளத்தில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இதில், முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசாரை ஈடுபடுத்தக்கோரி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் நேற்று மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

வாகனங்களை நிறுத்த வசதி

"அ.தி.மு.க. மாநாட்டுக்கு ஏற்கனவே சில பொதுவான நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தற்போது எதிர்பார்த்ததை விட அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதனால் மாநாட்டுக்கு வரும் நிர்வாகிகள் மற்றும் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மாநாடு நடைபெறும் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த தேவையான இடவசதிகள் ஏற்படுத்தி தர கோரி மனு வழங்கப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலனை செய்து அ.தி.மு.க. மாநாட்டில் எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்பது குறித்து ஒரு வாரத்தில் தகவல் தருவதாக சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். மேலும் மாநாட்டுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்" என்றார்.


Related Tags :
Next Story