காரைக்கால் மாவட்டத்திற்கு வருகிற 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள்ளது.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் 20 ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது.
விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்காலில் டிசம்பர் 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள்ளது.
Related Tags :
Next Story