விபத்தில் பலியான ராணுவ வீரர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி


விபத்தில் பலியான ராணுவ வீரர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி
x

விபத்தில் பலியான ராணுவ வீரர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டியை சேர்ந்தவர் சங்கிலிராயன் (வயது 42). இவர், திருச்சியில் உள்ள ராணுவ மையத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தொட்டணம்பட்டியில் வசிக்கிய அவரது தந்தை நடராஜனை பாம்பு கடித்து விட்டது. இதனால் அவர், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்ப்பதற்காக, கடந்த 8-ந்தேதி சங்கிலிராயன் திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

தனது தந்தையை பார்த்து விட்டு, அன்றைய தினம் மாலை திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விபத்தில் சிக்கி சங்கிலிராயன் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 10-ந்தேதி சங்கிலிராயன் பரிதாபமாக இறந்தார். அவருடைய உடல், சொந்த ஊரான தொட்டணம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவருடைய உடல் உறவினர்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, அங்குள்ள மாயனத்தில் ராணுவ வீரர்களின் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.


Next Story