21 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்


21 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
x

கேரளாவுக்கு கடத்த முயன்ற 21 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு,

கோவை அருகே ஒத்தக்கால்மண்டபம்-வேளந்தாவளம் சாலை குமிட்டிபதி பிரிவு அருகே மூட்டைகளில் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு தலா 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், வேளந்தாவளத்தை சேர்ந்த ஜான்பால் என்பவர் ரேஷன் அரிசி மூட்டைகளை தயாராக வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story