போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 21 மாடுகள் பிடிபட்டன


போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 21 மாடுகள் பிடிபட்டன
x

திசையன்விளை பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 21 மாடுகள் பிடிபட்டன.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை பஜாரில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைப்பது என பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இரவு பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி ஆகியோர் ஆலோசனையின்பேரில், பேரூராட்சி ஊழியர்கள் பஜாரில் சுற்றிய 21 மாடுகளை பிடித்தனர். தகவல் அறிந்து வந்த மாட்டின் உரிமையாளர்கள் 17 மாட்டிற்கு தலா ரூ.2,500 அபராதம் செலுத்தி மாடுகளை மீட்டு சென்றனர். அவர்களிடம் பேரூராட்சி சார்பில் மாடுகளை பஜாரில் மேய்ச்சலுக்கு அனுப்ப மாட்டோம் என பத்திரத்தில் எழுதி கையொப்பம் பெறப்பட்டது. மீட்கப்படாத மாடுகளை குலசேகரன்பட்டினத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைக்க இருப்பதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


Next Story