இந்து முன்னணியினர் 21 பேர் கைது
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை:
இந்து முன்னணி கலை மற்றும் கலாசாரப் பிரிவு மாநில தலைவர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய கோரியும், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சாமிநாதன், நாகை மாவட்ட தலைவர் காரைக்கால் கணேஷ், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், சீர்காழி நகர செயலாளர் சந்துரு உள்பட 21 பேரை கைது செய்து அந்தபகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story