மினி லாரி கவிழ்ந்து 21 பேர் காயம்


மினி லாரி கவிழ்ந்து 21 பேர் காயம்
x

சங்கராபுரம் அருகே மினி லாரி கவிழ்ந்து 21 பேர் காயம் கும்பாபிஷேக விழாவுக்கு சென்றபோது விபத்து

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி(வயது 21), கோவிந்தராஜ் மகன் அகரமுதல்வன்(1), பிரகாஷ்(28), பொன்னி(23), ஷோபா(35) உள்பட சுமார் 30 பேர் நேற்று காலை மினி லாரியில் திருக்கனங்கூர் பொன்வெட்டி அய்யனார் கோவில் கும்பாபிஷேகவிழாவை காண்பதற்காக சென்றுகொண்டிருந்தனர். மினி லாரியை அதே ஊரை சேர்ந்த தர்மசாஸ்தா(20) என்பவர் ஓட்டினார்.

சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மினிலாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மினி லாரியில் வந்த ஜெயந்தி, அகரமுதல்வன், பிரகாஷ், பொன்னி உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதில் தலையில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜின் மகன் அகரமுதல்வனை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து மினிலாரி டிரைவர் தர்மசாஸ்தா மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story